திடீரென வேலை செய்யாத ‘ஃபேஷியல் ஃபில்டர்’.. ‘லைவ் வீடியோவில் மாட்டிக்கொண்ட பிரபல ஸ்டார்..’

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Aug 01, 2019 04:28 PM

சீனாவில் பிரபலமான வீடியோ பிளாகர் ஒருவர் லைவ் வீடியோவில் ஃபேஷியல் ஃபில்டர் வேலை செய்யாததால் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்டுள்ளார்.

Young Vlogger Turns Out To Be 58YO After Beauty Filter Fails

சீனாவில் பிரபல வீடியோ பிளாகரான ஒரு பெண்ணுக்கு Douyu என்ற தளத்தில் லட்சத்திற்கு அதிகமான ஃபாலோயர்கள் இருந்துள்ளனர். இனிமையான குரலுக்கும், வசீகரமான பேச்சுக்கும் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட அவர் குரலுக்கும், ஃபோட்டோவுக்கும் ஃபில்டர் பயன்படுத்துவதுபோல வீடியோவுக்கும் ஃபில்டர் பயன்படுத்தி தன்னுடைய உண்மையான முகத்தைக் காட்டாமலேயே மிகவும் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் அவருடைய நிஜ முகத்தைக் காட்டுமாறு ரசிகர்கள் அனைவரும் கேட்க, ‘என்னுடைய கணக்கில் 12 லட்சம் ரூபாய் சேர்ந்தால் என் முகத்தைக் காட்டுகிறேன்’ எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு ரசிகர்கள் பலரும் அவருக்கு பணத்தை அனுப்பியுள்ளனர். அதிலும் தீவிர ரசிகர் ஒருவர் 4 லட்சம் ரூபாயை அந்த வீடியோ பிளாகருக்கு அனுப்பியுள்ளார்.

அந்த நேரத்தில் தான் ஒரு லைவ் வீடியோவில் டெக்னிக்கல் பிரச்சனை காரணமாக ஃபேஷியல் ஃபில்டர் வேலை செய்யாமல் போக அவருடைய உண்மையான முகம் ரசிகர்களுக்குத் தெரிந்துள்ளது. அவருடைய குரலை வைத்து அவர் இளமையாகவும், அழகாகவும் இருப்பார் என  அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் ஒரு 58 வயது பெண்மணி எனத் தெரியவந்துள்ளது. இந்த உண்மை தெரிந்ததும் ஏராளமான ஃபாலோயர்கள் அவரை அன்ஃபாலோ செய்துள்ளனர்.

இதில் ஒருதரப்பினர், “வயதில், அழகில் என்ன இருக்கிறது. அவர் செய்தது சரிதான். இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் சமூகத்தை இப்படித்தான் பழிவாங்க வேண்டும்” என அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்னொரு தரப்பினர் அவர் ஏமாற்றிவிட்டார் என அவரைத் திட்டிவருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது அந்த வீடியோ தளத்தில் பிரபலமான அனைவரையும் உண்மையான முகத்தைக் காட்டுமாறு சீன ரசிகர்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

Tags : #CHINA #DOUYU #FAMOUS #STAR #FACIAL #FILTER #FAILERS #58YEAROLD