ஆஹா...! 'ரொம்ப பயமுறுத்துறாங்களே...' 'விஷப்பாம்ப மூஞ்சுகிட்டலாம் கொண்டு வந்து...' - வாடிக்கையாளர்களை தெறிக்க விடும் 'ஸ்னேக்' தெரபி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொதுவாக மனிதனாக பிறந்தவர்கள் அனைவருக்கும் தங்களின் முகம் பொலிவுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், அதன் காரணமாக பல வகை அழகு சாதன பொருட்களை பல கார்பொரேட் நிறுவனங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டும், தயாரித்து விற்பனை செய்தும் வருகின்ன்றன .

இம்மாதிரியான கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு டப் கொடுக்க களத்தில் இறங்கியுள்ளார் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் என்ற பாம்பாட்டி.
இவர் நம் முகம் மற்றும் கழுத்து உள்ளிட்ட உடலில் பல இடங்களில் பரு, தேமல், கண்களில் கருவளையம் போன்றவற்றை தன் விஷப்பாம்பை கொண்டு நீக்குவதாக கூறிவருகிறார்.
திருவண்ணாமலை கீழ் புதூரை சேர்ந்த குமரேசன் திருபுவனையில் முகாமிட்டு அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் பலவீனத்தை பயன்படுத்தி, 'தன்னிடம் உள்ள விஷப்பாம்பை முகத்தில் தேய்த்தால் போதும் முகத்தில் இருக்கும் கருவளையம் மாயமாய் மறைந்து விடும்' என நூதன முறையில் தொழில் செய்து வருகிறார்.
இதை நம்பிய சிலர் 100 ரூபாயை கொடுத்து விஷப்பாம்பிடம் பம்மியபடி முகத்தை காட்டி வருகின்றனர், பலர் பயந்து தெறித்து ஓடியுள்ளனர்.

மற்ற செய்திகள்
