'ஒரு பாட்டில் ரூ 2500!!!'... 'அப்படி என்னதான் இருக்கு இதுல?!!'... 'இங்கிலாந்து நிறுவனம் வெளியிட்ட புது மாதிரியான அறிவிப்பு!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.

இங்கிலாந்தின் பிரபல இடமாற்ற வலைதளமான 'My Baggage' சாதாரண காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் தொழிலைத் துவங்கியுள்ளது. இந்த நிறுவனம் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாட்டிலில் நிரப்பப்பட்ட காற்றினை விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகிறது. இந்த பாட்டில் காற்று பல்வேறு ஃப்ளேவர்களிலும் கிடைக்கிறது. அதாவது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து என பல இடங்களிலுள்ள காற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இதில் தங்களுடைய விருப்பத்திற்கு எந்த பகுதியை சேர்ந்த காற்று வேண்டுமோ அதனை வெளிநாடுகளில் வசிக்கும் இங்கிலாந்து மக்கள் வாங்கிக்கொள்ளலாம். 500 மில்லி லிட்டர் அளவு கொண்ட ஒரு பாட்டிலில் உள்ள காற்றின் விலை, இந்திய மதிப்பில் 2,500 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காற்று பாட்டில்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இங்கிலாந்து மக்களால் அதிகம் வாங்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்த நிறுவனத்திடம் சிறப்புக் கோரிக்கை வைத்தால் அவர்கள் வாழ்ந்த சொந்த ஊரின் காற்றையும் பாட்டிலில் பிடித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
