‘10 மாத குழந்தை, பணிப்பெண் உட்பட கோவையில் குணமான 5 பேர்!’.. ‘மெல்லத் துளிர்விட்ட நம்பிக்கை!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்10 மாத குழந்தை உட்பட கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேர் குணமடைந்துள்ளார்கள் என்று அம்மாவட்ட ஆட்சியர் ராசாமணி தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிககப்பட்டிருந்த 25 வயது பெண் வீடு திரும்பினார். அவரைத் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் மருத்துவர், அவரது தாய், அவரது 10 மாத குழந்தை, அவரது வீட்டு பணிப்பெண் உள்ளிட்ட 4 பேருடன் சேர்த்து மொத்தம் 5 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 621 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கோவையில் மட்டும் 59 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில் 10 மாத குழந்தை உட்பட கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேர் குணமடைந்துள்ளார்கள் என்கிற செய்தி தமிழக அளவில் பெரும் நம்பிக்கையூட்டும் செய்தியாக மாறியுள்ளது.
