'சண்டை' போட்டு அம்மா வீட்டுக்கு போன மனைவி... பின்னாடியே சென்று 'தகராறு' செய்து... 'என்ஜினீயர்' செய்த பதற வைக்கும் காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கணவருடன் சண்டை போட்டு அம்மா வீட்டுக்கு மனைவி சென்றதால் ஆத்திரத்தில் என்ஜினீயர் இவ்வாறு செய்திருக்கிறார்.

நாகர்கோவில் பெருவிளை அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர் யூஜின் மரிய ஸ்டாலின் (36). இவருடைய மனைவி கேஷில்டா மேரி (32). என்ஜினீயரான யூஜின் மரிய ஸ்டாலின் வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் ஊர் திரும்பினார். அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படுவது வாடிக்கையாக இருந்துள்ளது.
இதனால் கேஷில்டா மேரி தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் யூஜின் மரிய ஸ்டாலின்அங்கும் அடிக்கடி சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோல நேற்று முன்தினம் இரவு மனைவியின் அம்மா வீட்டுக்கு போய் தகராறு செய்த யூஜின் மரிய ஸ்டாலின் ஆத்திரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு கார்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு ஓடி விட்டார்.
இதில் ஒரு கார் முற்றிலும் எரிந்து போனது. மற்றொரு காரின் பின்பகுதி முழுமையாக எரிந்து விட்டது. கேஷில்டா மேரி இதுகுறித்து போலீசில் புகாரளிக்க போலீசார் யூஜின் மரிய ஸ்டாலினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்ற செய்திகள்
