புத்தாண்டு கொண்டாட்டத்தில் மிரட்டும் ‘பைக் ரேஸ்’!.. இனி அந்த ‘தண்டனை’ தான்.. போலீசார் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் ரேஸில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைவரும் புத்தாண்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் புத்தாண்டை கொண்டாடுவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கடற்கரைகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் ரேஸில் ஈடுபட்டாலும், மது போதையில் வாகனங்களை ஓட்டினாலும் உடனே கைது செய்யப்பட்டு சிறை தண்டனை வழங்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் பைக் ரேஸில் ஈடுபட்ட சுமார் 225 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
