குடிக்கும்போது கூப்பிடல... கோபத்தில் நண்பர் செய்த பகீர் காரியம்... சென்னையில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மது போதை காரணமாக தினந்தோறும் பல வன்முறைகள் உலகம் முழுவதிலும் நடந்து வருகின்றன. இவற்றை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை அரசு முன்னெடுத்தாலும் அதற்கான பலன் கிடைக்கிறதா? என்றால் சந்தேகம்தான். அந்த வகையில் சென்னையில், நண்பனின் பிறந்த நாள் பார்ட்டியில் தன்னை விட்டுவிட்டு குடித்த காரணத்தினால் இளைஞர் தனது நண்பரை அடித்து கொன்றதாக தகவல் வெளியானது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
"டெல்லியில் இருந்து வந்த சின்னப் பையனுக்கு"..கோலிக்கு யுவராஜ் சிங் எழுதிய உருக்கமான லெட்டர்..!
திடீர் மரணம்
சென்னையின் ஆவடியை அடுத்த காட்டூர் பகுதியில் கால்பந்து விளையாடும்போது இளைஞர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்ததாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் கீழே விழுந்து உயிரிழந்ததாக சொல்லப்படும் வெங்கடேஷ் என்பவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .
பின்னர் இது குறித்து வெங்கடேஷின் நண்பர்களான சத்தியமூர்த்தி, ஜீவா மற்றும் சிராஜ்சிங் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். காட்டூர் பகுதியை சேர்ந்த இந்த மூன்று பெரும் போலீஸ் விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து காவல்துறை துருவி துருவி விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிறந்தநாள் பார்ட்டி
இந்த வழக்கு விசாரணை குறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள் "கடந்த 20 ஆம் தேதி சத்திய மூர்த்தி என்பவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்று இருக்கிறது. காட்டூர் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அருகில் உள்ள மைதானத்தில் சத்தியமூர்த்தி அவரது நண்பர்கள் ஜீவா,சிராஜ்சிங் மற்றும் வெங்கடேஷ் ஆகிய நான்கு பேரும் ஒன்றாக குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் சிராஜ் சிங்கை அங்கிருந்து அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், அவர் போனபிறகு மற்ற மூன்று பேரும் மீண்டும் குடித்துள்ளனர்" என்றனர்.
அதன்பிறகு தனது நண்பர் யஷ்வந்த் என்பவருடன் மீண்டும் அந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார் சிங். அப்போது குடித்துக்கொண்டிருந்த தனது நண்பர்களை பார்த்து சிங் கோபப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
இதில் யஷ்வந்த், வெங்கடேஷின் நெஞ்சில் கை வைத்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் கீழே விழுந்த வெங்கடேஷ்-ன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது மூக்கில் இருந்து இரத்தம் வழிந்துள்ளது.
மரணம்
இதனால் ஷாக்கான நண்பர்கள் உடனடியாக வெங்கடேஷை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், வெங்கடேஷ் முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து கால்பந்து விளையாடும் போது வெங்கடேஷ் உயிரிழந்து விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்திருக்கின்றனர் அவரது நண்பர்கள்.
இளைஞர் மரணமடைந்த விவாகரத்தில் சிராஜ் சிங் மற்றும் யஷ்வந்த் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
மரணமடைந்த வெங்கடேஷ்-ற்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று அவருக்கு 9 மாத குழந்தை ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
மகனின் சிகிச்சைக்கு உதவி கேட்ட பெற்றோர்.. கே.எல்.ராகுல் செய்த நெகிழ்ச்சி காரியம்.. என்ன மனுஷன்யா..