சுடுகாடு வரைக்கும் வந்திட்டு போங்க.. இரவு 12 மணிக்கு நண்பர்கள் போட்ட பிளான்.. நம்பி போனவருக்கு நடந்த கொடூரம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்வில்லியனூர் : வில்லியனூர் அருகே தனியார் கூரியர் கம்பெனி ஊழியரை தீர்த்துக் கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் சேர்ந்தவர் சீனுவாசன் என்கிற மூர்த்தி (31 வயது). இவர் அங்குள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்தார். இவருக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிறது. மணைவிபெயர் ஹேமா (23 வயது). குழந்தை இல்லாத நிலையில் சீனுவாசன் தனது தாயார் மல்லிகாவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்.
வீடு திரும்பவில்லை:
கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று சீனுவாசன் பகல் 11 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பருடன் சென்று மது அருந்தியுள்ளார். அருந்தி முடித்துவிட்டு இருவரும் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இரவு சுமார் 12.30 மணியளவில் சீனுவாசன் மீண்டும் வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும்அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் பல்வேறு இடங்களில் விசாரித்து வந்தனர்.
போலீசார் விசாரணை:
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வில்லியனூர் - பத்துக்கண்ணு மெயின்ரோடு அருகே இருக்கும்சுடுகாட்டில் உள்ள சிமெண்ட் தரையில் சீனுவாசன் சடலமாக மீட்கப்பட்டார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் வில்லியனூர் போலீசாரிடம் உடனே தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மேற்கு எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின் பேரில் விலலியனூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீனுவாசன் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
என்ன காரணம்?
மேலும், பிரேத பரிசோதனைக்காக சீனுவாசனின் உடலை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் 3 தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், வில்லியனூர் நவ சன்னதி வீதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சஞ்சீவி (21 வயது), அவரது நண்பர் புகழ் ஆகியோர் சீனுவாசனை பணத்திற்காக தீர்த்துக் கட்டியது தெரியவந்தது. இதனையடுத்து சங்கராபரணி ஆற்றங்கரையில் பதுங்கியிருந்த சஞ்சீவியை மடக்கி பிடித்த காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை உருவாக்கியது.
வாக்குமூலம்:
இதுகுறித்து காவல்துறையினர் கூறியிருப்பதாவது, 'ஞாயிற்றுக்கிழமை பகலில் மது அருந்திய சீனுவாசன் பின்னர் வீட்டில் வந்து தூங்கியுள்ளார். இந்த நிலையில் நள்ளிரவு 12.30 மணியளவில் மீண்டும் அவர் வெளியே சென்றுள்ளார். அப்போது மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால் கூடப்பாக்கம் - பத்துக்கண்ணு மெயின்ரோட்டில் உள்ள ஒரு நாட்டு மதுக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு ரூ.500 தாளை கொடுத்து மது வாங்கியுள்ளார். அப்போது அங்கு மது குடிக்க வந்த சஞ்சீவி மற்றும் அவரது நண்பரான புகழ் ஆகியோர் சீனுவாசனிடம் உள்ள பணத்தை எப்படியாவது பறிக்க வேண்டும் என திட்டம் போட்டுள்ளனர். இதனையடுத்து சீனுவாசனிடம் அவர்கள் பேசி அருகில் உள்ள சுடுகாட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
தப்பி ஓட்டம்:
அப்போது அவர்கள் சீனுவாசனிடம் பணம் கேட்டபோது, அவர் தர மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஆகியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சஞ்சீவி, புகழ் ஆகியோர் தீர்த்துக் கட்டியுள்ளனர். இதையடுத்து அவர் வைத்திருந்த ரூ.2,300 பணத்தை எடுத்துக்கொண்டு குற்றவாளிகள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
காவல் துறையினர் தங்களை தேடுவதை உணர்ந்த குற்றவாளிகள் இருவரும் சங்கராபரணி ஆற்றங்கரையில் பதுங்கி கிடந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு சென்றபோது சஞ்சீவி பிடிபட்டார். ஆற்றில் குதித்த பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை காவல் துறையினர் ட்ரோன் கேமரா மூலம் தேடி வருகின்றனர்.