தன்னை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸையே ஆட்டையைப்போட்ட நபர்.. கோவையில் பரபரப்பு.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் தன்னை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தையே ஒருவர் திருடிச் சென்று விபத்து ஏற்படுத்தி இருப்பது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து மது போதையில் இதனைச் செய்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
#Breaking:அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு: 38 பேருக்கு மரண தண்டனை.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி..!
காயம்
கோவையின் பூ மார்க்கெட் பகுதியில் காது காற்றும் தலை பகுதியில் காயம் அடைந்து ஒருவர் கிடப்பதாக அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சிற்கு போன்கால் செய்துள்ளனர். இதனை அடுத்து, திருப்பூரிலிருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மீட்பு
பூ மார்க்கெட்டில் காயமடைந்து கிடந்த நபரை மீட்ட ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அடிபட்டவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மருத்துவமனையின் உள்ளே அழைத்துச் சென்றனர். உள்ளே சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், திடீரென வெளியே வந்த அந்த நபர் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 வாகனத்தில் ஏறி அதனை ஸ்டார்ட் செய்திருக்கிறார்.
இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டிருக்கின்றனர். அதற்குள் 108 ஆம்புலன்ஸுடன் அங்கிருந்து காயம்பட்ட நபர் தப்பிச் சென்றிருக்கிறார்.
தலைக்கு ஏறிய போதை
டவுன் ஹால் பகுதியை நோக்கி ஆம்புலன்ஸை செலுத்திய அந்நபர், லங்கா கார்னரை தாண்டியவுடன் எதிர்திசையில் செலுத்தியுள்ளார். அப்போது எதிரில் வந்த ஒரு அரசுப்பேருந்து மற்றும் கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்திற்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸை திருடிச் சென்றவரை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்தனர். அப்போது அவர் போதையில் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து கடத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸை பின்தொடர்ந்து வந்த மருத்துவனை பணியாளர்களிடம் போதை ஆசாமியை ஒப்படைத்திருக்கிறார்கள் பொதுமக்கள்.
விசாரணை
இந்த விஷயம் குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார் மது போதையில் 108 ஆம்புலன்ஸை கடத்திய ஆசாமியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவருடைய பெயர் திலகர் எனத் தெரியவந்தது. ஆனால், போலீசார் எழுப்பிய பிற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.
குடி போதையில் தான் ஏறிச்சென்ற ஆம்புலன்ஸையே ஒருவர் திருடி விபத்து ஏற்படுத்தியது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.