"ஒன்லி அந்த பைக் மட்டும்தான் டார்கெட்"..போலீசை மிரள வைத்த 3 திருடர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையில் பல இளைஞர்கள் தவறான பாதைகளில் பயணித்து ஒருகட்டத்தில் அதற்கான தண்டனையையும் பெறுகிறார்கள். இப்படி குடி உள்ளிட்ட போதை பழக்கங்களின் காரணமாக தவறான விஷயங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் நாம் தினந்தோறும் படித்துக்கொண்டு தான் இருக்கிறோம். அப்படியான 3 பேர் தான் தற்போது புதுச்சேரி காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"என்னால தூங்க முடியல..படபடப்பா வருது"..கூகுள் மீது கர்ப்பிணி தொடுத்த வழக்கு..என்னதான் நடந்துச்சு..!
சோதனை
புதுச்சேரி காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீஸ்காரர்கள் சதீஷ் குமார், சிவசங்கர் ஆகியோர் கனக செட்டிகுளம் எல்லையில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு பைக்கில் 3 வந்திருக்கிறார்கள். அவர்களை வழிமறித்து நிறுத்திய போலீசார், அவர்கள் குறித்து விசாரித்திருக்கின்றனர்.
உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் வந்த 3 பேரும் காவல்துறை நடத்திய விசாரணையில் வேறுவேறு மாதிரி பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ் அதிகாரிகள் 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
விசாரணை
காவல்துறை நடத்திய விசாரணையில் சிக்கிய 3 பேரும் விழுப்புரம் மாவட்டம் ஆலப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த விக்னேஷ் (வயது 20), திண்டிவனம் ரெட்டணை முருகன் கோவில் தெருவை சேர்ந்த பரத் (20), கடலூர் மாவட்டம் வாழப்பட்டு ஜீவா நகரை சேர்ந்த தீனா என்ற சூர்யா (22) என்பது தெரியவந்தது.
சொகுசு வாழ்க்கை
மேலும், 3 பேரும் விலை உயர்ந்த பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடி அதன் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அவர்கள் அளித்த தகவலின் பேரில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 14 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்ப் படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
சொகுசு வழக்கை வாழ ஆசைப்பட்டு இளைஞர்கள் மூன்று பேர் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு கைதாகி இருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலக செஸ் சேம்பியனையே 39 மூவ்-ல் முடித்துவிட்ட தமிழக சிறுவன்..!

மற்ற செய்திகள்
