மொட்டை தலை, போலி பாஸ்போர்ட்.. ‘இவர் தான் அவர்’.. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்.. விரைந்து வந்த கேரள போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கேரளாவில் பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபரை திருச்சி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
UPI மூலம் பணம் செலுத்துபவரா.. இதையும் கொஞ்சம் தெரிஞ்சுகோங்க.. இல்லைனா பணம் காலி!
திருச்சி
சிங்கப்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்துள்ளது. இதனை அடுத்து விமான பயணிகளின் ஆவணங்களையும், உடமைகளையும் விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது தேடப்பட்டு வரும் குற்றவாளி என ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுக்கப்பட்ட ஒருவரை பிடித்த அதிகாரிகள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மோசடி மன்னன்
இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே காமராஜர் நகரைச் சேர்ந்த தேவராஜன் (வயது 48) என்பதும், கேரளாவில் பல பேரை ஏமாற்றி, பல கோடி ரூபாய் மோசடி செய்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
லுக் அவுட் நோட்டீஸ்
கடந்த 2020-ம் ஆண்டு கேரள மாநிலம் கொச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் தேவராஜன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார். இதனை அடுத்து, அவர் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, தேவராஜன் குறித்த விபரங்கள் அனைத்து விமான நிலையங்களுக்கும் பகிரப்பட்டது.
போலி பாஸ்போர்ட்
இந்த நிலையில், சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்த தேவராஜன், போலியாக பாஸ்போர்ட் தயார் செய்து, மொட்டையடித்து தனது அடையாளத்தையும் மாற்றிக் கொண்டுள்ளார். இதுகுறித்து, கேரள மாநிலம் கொச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு, விமான நிலைய போலீசார் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கொச்சி போலீசார், தேவராஜனை கைது செய்து கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர்.