"அரசு ஊழியர்கள் ILLEGAL-ஆக 2வது திருமணம் செய்தால் நடவடிக்கை பாயும்".. தமிழக அரசு அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு ஊழியர்கள் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளக்கூடாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
Also Read | என்னது கோவிலுக்கு போனா பொங்கல் கிடைக்குமா? .. வைரலாகும் குழந்தையின் கியூட் வீடியோ..!
மனு
சில ஆண்டுகளுக்கு முன்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பெண்மணி ஒருவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அரசு ஊழியரான தனது கணவர் முதல் திருமணத்தை மறைத்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதில் கருத்து தெரிவித்த நீதிபதி "இரண்டு திருமணங்களை செய்து கொள்வது நன்னடத்தை ஆகாது. இது சட்டப்படி குற்றம் கூட. ஆனால் பல அதிகாரிகள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்கின்றனர். அரசு ஊழியர் ஒருவரின் இரண்டாம் திருமணம் தொடர்பான பிரச்சனையை சமரச தீர்வு மையம் தீர்த்து வைத்தது அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது. இது போன்ற செயலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது போன்ற பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றினை எடுத்துள்ளது.
இரண்டாவது திருமணம் கூடாது
முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் அரசு ஊழியர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பான அரசாணையில் "துணை உயிருடன் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இரண்டாம் திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973 இன் படி அந்த ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
மேலும் தமிழக அரசு இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் "இரண்டாவது திருமணம் செய்வது ஒழுக்கக் கேடானது. அரசு ஊழியர் இரண்டாவது திருமணம் செய்தால் சட்டரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை" எனவும் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆகவே முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்திருக்கிறது
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8