கடற்கரையில் நடந்துட்டு போயிட்டு இருந்தப்போ.. நீரில் பெண் பார்த்த உருவம்.. "டைனோசர் தல மாதிரியே இருக்குற உருவமா அது??".. மர்மம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்காட்லாந்திலுள்ள Loch என்னும் பகுதி அருகே நீரில் உருவம் தென்பட்டது தொடர்பான விஷயம், பலரையும் பரபரப்பு அடைய வைத்துள்ளது.
Also Read | "Blood ரிப்போர்ட்ல கூட Comparison-ஆ??".. அலப்பறை அப்பாவின் வாட்சாப் 'மெசேஜ்'.. மகளின் வைரல் ரியாக்ஷன் 😂
ஸ்காட்லாந்து அருகே Loch Ness என்ற கடற்கரை ஒன்று உள்ளது. அங்கே சமீபத்தில் ஒரு தாய் மற்றும் மகள் ஆகியோர், அதன் கரை அருகே நடந்து சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, கரையில் இருந்து சுமார் 200 யார்டு தூரத்தில் ஒரு மர்ம உயிரினம் தெரிந்ததை அந்த தாய் மற்றும் மகள் ஆகியோர் அடையாளம் கண்டுள்ளனர்.
இது பற்றி பேசும் அவர்கள், தண்ணீரில் இருந்து கருப்பு நிறத்தில் ஒரு உருவம் தோன்றி, சுமார் 30 நொடிகள் வரை வெளியே இருந்து பின் மறைந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அது நீந்தி செல்லவில்லை என்றும், நீரில் துள்ளிக் குதித்து சென்றதையும் அவர்கள் கவனித்ததாக தாய் மற்றும் மகள் தெரிவித்துள்ளனர்.
இது மற்ற நபர்களுக்கு புதிய விஷயமாக இருந்தாலும், சமீப காலத்தில் கடந்த பல முறை ஸ்காட்லாந்து கடற்கரையில் இப்படி ஒரு உருவம் தென்பட்டதாகவும் ஏராளமானோர் தெரிவித்திருந்தனர். Loch Ness Monster (Nessie) என இதனை பலரும் குறிப்பிடும் நிலையில், டைனோசர் போல தலை கொண்ட ஒரு உயிரினம் தான் தற்போது அந்த தாய் மற்றும் மகள் கண்ணில் தென்பட்டுள்ளது என்றும் பலர் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி தொடர்ந்து பல விதமான ஆய்வுகள் உள்ளிட்ட விஷயங்கள் ஸ்காட்லாந்து கடற்கரையை குறிப்பிட்டு நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், உண்மையில் டைனோசர் தலை போல தெரியும் அந்த மர்ம உயிரினம் என்ன என்பது பற்றி உறுதியான தகவலை பெண் ஒருவர் கண்டுபிடித்ததாகவும் சில தகவல்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்பதும் உறுதியாக தெரியவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து கடற்கரை பகுதியில் தென்படும் கருப்பு உருவம் தொடர்பான செய்தி, தற்போது இணையத்திலும் பேசு பொருளாக மாறி உள்ளது.