'அப்ப அப்பாவோடு நான் இல்ல.. 'இப்போ நானிருக்கிறேன்.. வைரலாகும் ஸிவா தோனி'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 06, 2019 12:03 PM

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரானப் போட்டியில், ரோகித் சர்மா மற்றும் தோனி விளையாடிக்கொண்டிருந்தபோது ஸிவா தோனியின் சேட்டைகள் வைரலாகியுள்ளது.

Ziva Dhoni had fun in india batting at england world cup 2019

உலகக் கோப்பை போட்டியில் ஒருபுறம் பரபரப்பான ஆட்டம் நடைப்பெற்றாலும், மற்றொருபுறம் வேடிக்கையான சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அப்படியான சம்பவம்தான் இது. எந்த கிரிக்கெட் போட்டிகளுக்கு சென்றாலும் தோனி தனது மகள் ஸிவாவையும் அழைத்துச் செல்வது வழக்கம். அவ்வாறு அழைத்து செல்லும் ஸிவா தோனி செய்யும் சேட்டைகள் வைரல் ஆகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும்போதெல்லாம், ஸிவாவும் வைரல் ஆவார். தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் ஸிவாவின் சேட்டைகள் வைரல் ஆகியுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்க தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றிருந்தது. உலக சாம்பியனாக இருந்த இந்திய அணி, மீண்டும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் சென்றிருந்தது. பயிற்சி ஆட்டங்கள் தொடங்க இரண்டே நாட்கள் தான் இருந்தன.

அப்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்று தோனிக்கு வருகிறது. அதாவது  ‘தோனிக்கு மகள் பிறந்திருக்கிறாள்’ என்று. இதுகுறித்து தோனியிடமே செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். ஆனால், இப்போது நான் நாட்டுப் பணியில் இருக்கிறேன். மத்ததெல்லாம் அதற்கு அப்புறம் தான். இப்போது உலகக்கோப்பையை வெல்வதே முக்கியம்” என்று பதிலளித்தார். இந்த பதில் அப்போது வைரல் ஆனது.

அதன்பிறகு, தோனியை விட சமூக வலைத்தளங்களில் தனது மழலையான சேட்டைத்தனத்தால், ஒவ்வொரு முறையும் அதிகம் வைரல் ஆவது ஸிவா தான். இந்தக் குட்டிப் பாப்பாவிற்கு இப்போது 4 வயது ஆகிவிட்டது.