'தல' ஏன் அப்படி பண்ணுனாரு?'...'அதுக்கு பின்னால ரகசியமே இருக்கு'... 'ரகசியம் உடைத்த ஊழியர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jun 06, 2019 11:35 AM

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் தோனி, அடிக்கடி பேட்டை மாற்றி மாற்றி விளையாடும் காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

Dhoni’s three different bats key to his recent success

உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது.இதையடுத்து நேற்று நடந்த முதல் போட்டியில்,தென்னாப்பிரிக்காவை சந்தித்த இந்திய அணி தனது முதல் வெற்றியினை பதிவு செய்தது.இந்த உலகக்கோப்பை போட்டியில் அதிகம் கவனிக்கப்படும் வீரராக இருப்பவர்,'தல' என ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் தோனி.இந்திய ரசிகர்கள் கடந்து மற்ற நாட்டு ரசிகர்களும் அவரது ஆட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.அதற்கு முக்கிய காரணமாக இருப்பது,தோனிக்கு இது தான் கடைசி உலகக்கோப்பை என்ற கருத்து தான்.அதனை தோனி உறுதி செய்யவில்லை என்றாலும்,அதனை அவர் மறுக்கவும் இல்லை.

இதனிடையே தோனியின் சில அணுகுமுறைகளும் அவருக்கு இது தான் இறுதி உலகக்கோப்பை போட்டியாக இருக்கலாம் என்பதனை அறிவுறுத்துகிறது.அதில் முக்கியமாக கருதப்படுவது,தோனி தனது பேட்டை மாற்றி மாற்றி விளையாடுவது தான்.வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில்,தோனி அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.இந்த போட்டியின் போது,இடை இடையில் தோனி தனது பேட்டை மாற்றி மாற்றி விளையாடினார்.

இந்நிலையில் தோனியின் பேட்டினை தயாரிக்கும் நிறுவனத்தின் ஊழியர் கூறுகையில் ''தோனி தனது பேட்டின் எடையை குறைக்கும் படி தங்களது நிறுவனத்திடம் கூறியுள்ளார். அதன்படி 10 முதல் 20 கிராம் வரை பேட்டின் எடை குறைக்கப்பட்டது.இது தான் தோனி பேட்டை மாற்றி மாற்றி விளையாடியதற்கு முக்கிய காரணம் என கூறியுள்ளார்.