'அது போன மாசம், இது இந்த மாசம்'... 'பும்ராவை கலாய்த்த சேவாக்'... வைரலாகும் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 05, 2019 09:15 PM

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பற்றி, வீரேந்திர சேவாக்கின் ட்வீட் சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

from mercy to no mercy virender sehwag revisits jasprit bumrah

கடந்த மே மோதம் நடந்த ஐ.பி.எல் இறுதிப் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. அதில், மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மும்பை அணி வீரரான பும்ரா வீசிய 19-வது ஓவரில், முக்கிய கேட்சினை குவின்டன் டி காக் தவறவிட்டார். இதற்காக வருத்தப்படாத பும்ரா, ஓவர் முடிவில் டி காக்கிடம் சென்று, தனது சிரிப்பை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி புதன்கிழமையன்று தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்திய வீரர் பும்ராவின் பந்துவீச்சு, தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்களை நீண்ட நேரம் களத்தில் தங்க விடவில்லை. பும்ரா வீசிய பந்துகளை டி காக்கினால் சரியாக எதிர்கொள்ள முடியாமல், 3-வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

இதையடுத்து வீரேந்திர சேவாக், பும்ராவின் பந்துவீச்சை பாராட்டி ட்வீட்டியுள்ளார். அதில், 'ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் தனது பந்துவீச்சில் சக வீரரான டி காக், சென்னை அணியின் விக்கெட்டை தவறவிடும் போது பும்ரா அதனை சாதரணமாக எடுத்துக் கொண்டார். ஆனால் இன்று தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனான டி காக்கிற்கு, எவ்வித கருணையையும் பும்ரா காட்டவில்லை' என சேவாக் கூறியுள்ளார்.