‘தல’ இருக்கும் போது இதலெல்லாம் ஏன் பாஸ் பண்றீங்..! வைரலாகும் தோனியின் ஸ்டெம்பிங் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 05, 2019 07:43 PM

தென் ஆப்பிரிக்க வீரரை தோனி ஸ்டம்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: MS Dhoni quick stumping during India vs South Africa match

உலகக்கோப்பை லீக் சுற்றின் 8 -வது போட்டி இன்று(05.06.2019) இங்கிலாந்தின் சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக தென் ஆப்பிரிக்காவின் டி காக் மற்றும் ஹாசிம் அம்லா களமிறங்கினர். ஆனால் இருவரும் பும்ரா வீசிய ஓவரில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.

இதனை அடுத்து களமிறங்கிய டேர் டஷன் மற்றும் டு ப்ளிஸிஸ் கூட்டணி நிதானமாக விளையாட ஆரம்பித்தது. இதில் டு ப்ளிஸிஸ் 38 ரன்களும், டஷன் 22 ரன்களும் எடுத்திருந்த போது சஹாலில் ஓவரில் இருவரும் அவுட்டாகினர். அடுத்து வந்த கிரிஸ் மோரிஸ் மற்றும் ஆண்டிலே ஜோடி அதிரடியாக ஆட ஆரம்பித்தது. இதில் ஆண்டிலே 34 ரன்கள் எடுத்திருந்த போது தோனி ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார். அதனைத் தொடர்ந்து கிரிஸ் மோரிஸூம் 42 ரன்களில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை தென் ஆப்பிரிக்கா எடுத்துள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #MSDHONI #VIRATKOHLI #TEAMINDIA #INDVSA