‘தோனி ரன் அவுட்டை பார்த்து ஷாக் ஆன அம்பயர்’.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 11, 2019 12:29 PM

நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோனி ரன் அவுட் ஆனதைப் பார்த்து அம்பயர் ஷாக் ஆன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Umpire\'s stunned reaction to MS Dhoni\'s run out

மான்செஸ்டர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 239 ரன்களை குவித்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பமே சருக்கலை சந்தித்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதனைத் தொடர்ந்து வந்த ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்ட்யா கூட்டணி இந்திய அணியை சரிவில் இருந்து சற்று மீட்டது.

இதனை அடுத்து களமிறங்கி ஜோடி சேர்ந்த தோனி மற்றும் ஜடேஜா கூட்டணி அதிரடியாக ஆட ஆரம்பித்தது. இதில் சிகஸ்ரும், பவுண்டரியுமாக விளாசிக் கொண்டிருந்த ஜடேஜா 77 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அதனை அடுத்து இருந்த ஒரே நம்பிக்கையான தோனியும் ரன் அவுட்டில் வெளியேற ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடைசியாக 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் தோனியின் ரன் அவுட்டைப் பார்த்து அம்பயர் அதிர்ச்சி அடைந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #ICCWORLDCUP2019 #MSDHONI #INDVNZ #CWC19 #TEAMINDIA #SEMIFINAL1 #UMPIRE