'அப்டியா.. கேக்கவே காமெடியா இருக்கு' .. 'அந்த மாதிரிலாம் தெரியலயே' .. 'டோஸ் கொடுத்த'.. பிரபல மாத இதழ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 04, 2019 09:07 PM

அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாசிசத்திற்கான 7 மிக முக்கியமான குறியீடுகளை பாஜக ஆட்சியில் காண முடிவதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹூரா மோத்ரா, நாடாளுமன்றத்தில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Washington Monthly replies over Trinamool MP Mahua Moitra

அதைவிட சர்ச்சையைக் கிளப்பிய விஷயம் என்னவென்றால், முக்கிய செய்திச் சேனலின் நிரூபர் ஒருவர், வாஷிங்டன் மாத இதழில் வெளிவந்த கட்டுரையை காப்பி அடித்து, அதில் இருப்பதையே, தன் கருத்து போல பேசினார் என்று மஹூராவின் மீது, தன் விமர்சனத்தை முன்வைத்ததுதான்.

இதனிடையே, இதற்கு விளக்கம் அளித்திருந்த மஹூரா, தான் தன் மனதில் தோன்றியவற்றையே பேசியதாகவும், உண்மையில்,  அரசியல் விஞ்ஞானி லாரன்ஸ்.பி.டபுள்யூ எழுதிய பாசிசத்தின் 14 குறியீடுகளில் 7 குறியீடுகள் பாஜகவுடன் பொருந்துவதாகவே, தான் பேசியதாகவும் கூறியுள்ளார்.

இந்த விஷயம் எப்படியோ வாஷிங்டன் மாத இதழின் கவனத்துக்குச் சென்றுவிட்டது. அதன் பின்னர், அந்த இதழின் சார்பாக அளிக்கப்பட்ட பதிலில், இந்திய அரசியலாளர் மஹூரா தங்கள் இதழில் 2017-ஆம் ஆண்டு வெளியான கட்டுரையின் சாராம்சத்தைத் திருடி பேசவில்லை என்று தோன்றுவதாக தங்களது ஆய்வு கூறுகிறது என்று பதிவிட்டுள்ளது.

கூடுதல் விளக்கம் அளித்த, வாஷிங்டன் மாத இதழின் ஆசிரியர் மார்டின் லாங்மேன், இதைக் கேட்கும்போது நகைச்சுவையாக உள்ளதாகவும், உலகம் முழுவதும் வலதுசாரிப் பார்வை உடையவர்கள் ஒரே மாதிரிதான் இருக்கின்றனர் என்றும் பேசியுள்ளார்.

Tags : #MAHUA MOITRA #CONTROVERSY