'90'ஸ் கிட்ஸோட ஹீரோ நீங்க' ... 'ஒரேய வீடியோல இப்படி அழ வச்சிட்டியே'... வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Jun 11, 2019 12:00 PM
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் அறிவித்திருப்பது,கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் யுவராஜ் குறித்த செய்தியே அதிகம் ஆக்கிரமித்திருக்கிறது.இதனிடையே யுவராஜ் சிங் தனது கிரிக்கெட் ஆடைக்கு விடை கொடுக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

அந்த வீடியோவில் யுவராஜ் 12ஆம் எண் போட்ட தனது கிரிக்கெட் ஆடையை தொட்டுப்பார்த்து விடை கொடுக்கிறார்.இது மிகவும் உருக்கமான மற்றும் உணர்வுப்பூர்வமான தருணம் என கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.யுவராஜ் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல,தன்னம்பிக்கைக்கு மிக சிறந்த உதாரணமும் கூட.புற்று நோயினால் பாதிக்கப்பட்ட யுவராஜ்,அதனுடன் போராடி அதிலிருந்து மீண்டும் வந்தார்.எனவே அவரை நினைக்கும் போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ்.அவரது அதிரடியான ஆட்டத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில்,பிராட் பந்துவீச்சில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசியதை,கிரிக்கெட் வரலாற்றில் யாரும் மறக்க முடியாத சாதனை.எனவே யுவராஜின் ஓய்வு என்பது,கிரிக்கெட் உலகத்திற்கே பெரும் வெற்றிடம் என்றால் அதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
#YuvrajSingh really i miss you bro😢 pic.twitter.com/KoU754OvSU
— Br.Nawin (@jiiibeem) June 10, 2019
