‘முகத்தில் ஆழமாகக் குத்திய 10 அங்குல கத்தி..’ சிறுவனுக்கு நடந்த பரிதாபம்..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Jun 19, 2019 12:22 PM
அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனின் முகத்தில் ஆழமாகக் குத்திய 10 அங்குல கத்தியை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று சிறுவன் எலி கிரெக் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்தபோது தவறி விழுந்துள்ளார். அப்போது அங்கு இருந்த கத்தி அவரது வலது கண்ணுக்குக் கீழே ஆழமாகக் குத்தியுள்ளது. அடிபட்ட கிரெக்கின் அலறல் கேட்டு வெளியே வந்த அவரது தாய் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். கத்தியை எடுக்க அவர் முயற்சி செய்து முடியாமல் போக உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அந்தக் கத்தி மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். பின்னர் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு கத்தியை வெற்றிகரமாக நீக்கியுள்ளனர். கிரெக் விரைவில் குணமடைந்து விடுவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
