காயத்தால் திடீரென விலகிய தவான்..! தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் மற்றொரு வீரர்?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 11, 2019 02:44 PM
ஆஸ்திரேலியா அணியுடனான போட்டியின் போது கைவிரலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் 3 வாரங்கள் விலகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

12 -வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது அடுத்ததாக நாளை மறுநாள்(13.06.2019) நடைபெற உள்ள போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் தவானுக்கு 3 வாரங்கள் ஓய்வு தேவை என தெரிவித்துள்ளனர். இதனால் அடுத்து அடுத்த மூன்று வாரங்களுக்கு தவான் விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஆஸ்திரேலிய பந்துவிச்சாளர் கூல்டர் நைல் வீசிய பந்து தவானின் கையில் பலமாகபட்டது. அப்போது உடனடியாக பிசியோதெரபிஸ்ட் மைதானத்தில் தவானுக்கு சிகிச்சை அளித்தனர். இதனைத் தொடர்ந்து விளையாடிய தவான் சதம் விளாசினார். தற்போது தவான் காயம் காரணமாக விலகியுள்ளதால் தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் களமிறங்க வாய்ப்பு உள்ளது. மேலும் ராகுல் விளையாடிய 4 -வது இடத்தில் தமிழக வீரர்களான விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் விளையாட வாய்ப்பு உள்ளது.
