அப்போ அடுத்த மேட்ச்ல விளையாடமாட்டரா? கைவிரலில் பலத்தகாயமடைந்த இந்திய நட்சத்திர வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 11, 2019 11:38 AM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் சுற்றின் போது கைவிரலில் காயம் ஏற்பட்ட ஷிகார் தவானுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது.

World Cup 2019: Dhawan to undergo scans on his swollen thumb

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்திய அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 3 -ம் இடத்தில் உள்ளது. இதனை அடுத்து வரும் வியாழக்கிழமை(13.06.2019) உலகக்க்கோப்பை லீக் சுற்றின் அடுத்த போட்டியில் நியூஸிலந்துடன் இந்திய அணி மோதுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு மருத்துவ பரிசோதனை நடபெற உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கூல்டர் நைல் வீசிய பந்து தவானின் கைவிரலில் பலமாக தாக்கியது. இதனால் அப்போது மைதானத்திலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விளையாடிய தவான், சதம் அடுத்து அசத்தினார்.

மேலும் கையில் ஏற்பட்ட காயம் அதிகமானதால் அவருக்கு பதிலாக ஜடேஜா பீல்டிங் செய்தார். இதனால் தவானின் கைவிரலில் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க உள்ளனர். நியூஸிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்பாக தவானின் காயம் குணமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #ICCWORLDCUP2019 #BCCI #DHAWAN