'வா தல.. வா தல'.. அதே எனர்ஜி.. அப்டியே போறோம்.. விண்டீஸ தட்டி.. தூக்குறோம்.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Jul 25, 2019 12:00 PM
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மோதிய இந்திய அணி தோல்வியுற்றாலும், இந்திய அணியின் ஆக்ரோஷமான ஆற்றலான விராட் கோலி விடுவதாய் இல்லை.

தன்னுடைய அதே எனர்ஜியை எப்போதும் மாறாத இயல்புடன் தன்னுடன் தக்க வைத்துக் கொள்ளும் கோலி, தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள எனர்ஜிட்டிக் வீடியோ ஒன்று இணையத்தில் கலக்கி வருவதோடு, இளைஞர்களை ஈர்த்து வருகிறது. இதே எனர்ஜிதான் பாசிடிவிட்டிக்கு அடையாளம் என்பது போல் இருக்கும் இந்த வீடியோவுக்கு கோலி ஒரு கேப்ஷனும் வைத்துள்ளார்.
அதன்படி, ‘நேர்மறையான ஒன்றுதான் நேர்மறையான ஒன்றை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும். நம்முடைய சாய்ஸ்தான், நம்மிடம் இருந்து ரிசல்ட்டாக வெளிவரும்’ என்று கேப்ஷன் பதிவிட்டுள்ள கோலி, இந்த வீடியோவில் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்துக்காக டான்ஸ் ஆடுகிறார்.
அடுத்து கோலி தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 விதமான விளையாட்டுகளில் இந்திய அணி மோதவுள்ள போட்டிகள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 3-ஆம் தேதி வரை நடக்கின்றன.
Positivity attracts positivity. Your choice defines your outcome. 🙏😇 #BTS pic.twitter.com/koj95Ycgrc
— Virat Kohli (@imVkohli) July 24, 2019
