‘பல பெண்களுடன் பேசிய சாட்டிங் லீக்'... 'சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 25, 2019 12:19 PM

பிரபல பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் பல பெண்களுடன் பேசிய வாட்ஸ் அப் சாட்டிங், ஸ்கிரீன் ஷாட்டுகளாக இணையத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Pakistan batsman Imam ul Haq accused of having multiple affairs

உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 11 புள்ளிகளை பெற்றும், நெட் ரன்ரேட் அடிப்படையில், நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றது. இதனால் அரையிறுதிக்கு செல்லாமல் பாகிஸ்தான் அணி வெளியேறியது. வங்கதேசத்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் சதமடித்தார். சதம் அடித்ததன் காரணமாக, அந்நாட்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் இளம் வீரரான இமாம் உல் ஹக்.

ஆனால், தற்போது, பெண் விவகாரத்தில் சிக்கியுள்ளார் இமாம் உல் ஹக். பல பெண்களுடன் இமாம் உல் ஹக் வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்த விவரங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது. இதனால், ரசிகர்களின் கேலிக்கு இமாம் உள்ளாகியுள்ளார்.  இது தொடர்பாக இமாம் உல் ஹக் விளக்கம் ஏதும் அளிக்காதது சந்தேகத்தை உறுதி செய்வதாகவும் பலர் கூறியுள்ளனர். இவர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ஸாம் உல் ஹக்கின், உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.