‘எல்லாரையும் திருப்திபடுத்தறது உங்க வேல இல்ல..’ இந்திய அணி குறித்து பிரபல வீரர் காட்டம்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 24, 2019 02:27 PM

உலகக் கோப்பை தோல்வியைத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களுடன் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Selectors job not about making everyone happy says Ganguly

வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடருக்கான இந்திய அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணித்தேர்வு குறித்து முன்னான் கேப்டன் சவுரவ் கங்குலி காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கங்குலி, “இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் ஒரே வீரர்களை மூன்று வகையான போட்டிகளுக்கும் தேர்வு செய்யும் நேரம் வந்துவிட்டது. அப்போதுதான் ஒத்த உணர்வும், தன்னம்பிக்கையும் இருக்கும். ஒரு சில வீரர்களே அனைத்து போட்டிகளிலும் விளையாடுகிறார்கள். சிறந்த அணிகள் ஒரே வீரர்களையே தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும். இது அனைவரையும் திருப்திபடுத்த வேண்டியதைப் பற்றியதல்ல. அணிக்கு எது சிறந்ததோ அதைத்தான் செய்ய வேண்டும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் மூன்று வகையான போட்டிகளிலும் விளையாடக்கூடிய நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். சுப்மான் கில் தேர்வு செய்யப்படாததும், ரஹானே ஒரு நாள் அணியில் இல்லாததும் ஆச்சரியமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #SOURAVGANGULY ##SHUBMANGILL ##AJINKYARAHANE #BCCI