‘என் வாழ்க்கையின் சிறந்த, மோசமான நாள் அது’... ‘இன்ஸ்டாகிராமில் உருகிய வீரர்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 24, 2019 01:23 PM
உலகக் கோப்பை இறுதி ஆட்டம் எனது வாழ்வில் ஏற்பட்ட சிறந்த மற்றும் மோசமான நாள் என, நியூசிலாந்து தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கெதிராக நடைப்பெற்ற, உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், அதிக பவுண்டரிகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்நிலையில், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி முடிந்து ஒருவாரம் ஆகிவிட்டது என்பதை நம்புவது கடினமாக உள்ளது. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்த மற்றும் மோசமான நாள் அது என்று நான் நினைக்கிறேன்.
பல வித்தியாசமான உணர்ச்சிகள், ஆனால் முக்கியமாக நியூசிலாந்தைப் பிரதிநிதிப்படுத்துவதற்கும், ஒரு பெரிய குழுவினருடன் விளையாடியதையும் நினைத்து பெருமிதம் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார். மேலும் அவர், ‘எனது நல்ல தருணம் மற்றும் மோசமான நாள் இரண்டிலும், ஆதரவு தரும் இருவர் என்னோடு வருவார்கள். எனது மகளையும், மனைவியையும், உலகில் வேறு எந்த விஷயத்தையும் விட அதிகம் விரும்புகிறேன்’ என்று இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.