‘என்னை யாரும் இப்படி அவமானப்படுத்தியது இல்லை..’ விமான நிலைய அதிகாரிகள் மீது பிரபல முன்னாள் வீரர் குற்றச்சாட்டு..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 24, 2019 01:00 PM

இங்கிலாந்தின் மான்செஸ்டர் விமான நிலையத்தில் அதிகாரிகள் தன்னை மிகவும் மோசமாக நடத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் குற்றம் சாட்டியுள்ளார். 

Wasim Akram left embarrassed and humiliated at Manchester airport

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள வாசிம் அக்ரம் 1997ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இன்சுலின் பயன்படுத்தி வருபவர்.  நீரிழிவு நோயாளிகள் எங்கு சென்றாலும் இன்சுலின் ஊசிகள் அடங்கிய பையை உடன் எடுத்துச் செல்லலாம். இந்நிலையில் மான்செஸ்டர் விமான நிலையத்தில் அதிகாரிகள் இன்சுலின் மருந்து வைத்திருந்த தன்னை அனைவர் முன்னிலையிலும் மோசமாக நடத்தியதாக வாசிம் அக்ரம் ட்விட்டரில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இன்சுலின் பை குறித்து அதிகாரிகள் நாகரிகமற்ற முறையில் கேள்விகள் எழுப்பியதோடு, இன்சுலினை குளிர்பதனப் பெட்டியிலிருந்து எடுத்து பிளாஸ்டிக் பையில் வைக்குமாறு கூறியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். உலகம் முழுவதும் இன்சுலின் பையுடன் பயணித்துள்ளபோதும் இதுவரை இப்படி நடத்தப்பட்டதில்லை. இது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை கருதியே என்பதைப் புரிந்து கொண்டாலும் அதற்காக அதிகாரிகள் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று இல்லை என அவர் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #INDVSPAK #PAKISTAN #CAPTAIN #WASIMAKRAM