‘அற்புதம்’.. இனி புவனேஷ்வர்குமாருக்கு பதில் விளையாட போறது இவர்தானா? .. சூசகமாக சொன்ன கோலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 18, 2019 08:58 PM
இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக விளையாடும் வீரர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசும் போது எதிர்பாரதவிதமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அப்போதே போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். பின்னர் அவருக்கு பதிலாக விஜய் சங்கர் விளையாடினார்.
இதனை அடுத்து காயம் சரியாகததால் அடுத்து நடைபெற உள்ள சில போட்டிகளில் புவனேஷ்வர்குமார் விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. காயத்தின் அளவு சிறியதாக இருப்பதால் புவனேஷ்வர்குமார் விரைவில் அணிக்கு திரும்புவார் என கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதிலாக முகமது ஷமி விளையாட வாய்ப்பு உள்ளதாகவும் கோலி தெரிவித்தார்
இந்நிலையில் புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக அடுத்த சில போட்டிகளில் விளையாட வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக காயம் காரணமாக விலகிய ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.