‘ஒரு டீம்லயாவது செலெக்ட் ஆவேனு எதிர்பாத்தேன்..’ அணித்தேர்வு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள இளம்வீரர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 23, 2019 02:24 PM

உலகக் கோப்பை தோல்வியைத் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

INDvsWI Expected to be selected for the squad Shubman Gill

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கப்பட்டது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இடம்பெறாதது குறித்து இளம்வீரர் சுப்மான் கில் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள அவர், “வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஏதாவது ஒரு அணியிலாவது இடம்பெறுவேன் என எதிர்பார்ப்புடன் இருந்தேன். இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. ஆனால் நான் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கப்போவதில்லை. தொடர்ந்து என்னால் முடிந்தவரை அதிக ரன்கள் எடுத்து இந்திய அணிக்குத் தேர்வாக முயற்சிப்பேன். இந்தியா ஏ அணிக்காக விளையாடியது நல்ல பாடமாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.

தற்போது இந்தியா ஏ அணிக்காக விளையாடி வரும் சுப்மான் கில் இதுவரை 38 போட்டிகளில் 1545 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக விளையாடிய ரஞ்சி தொடரிலும் சிறப்பாக விளையாடி 5 போட்டிகளில் 700ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடியுள்ள இவர் ‘தொடரின் வளர்ந்துவரும் வீரர்’ என்ற விருதையும் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #INDVSWI #TEAMINDIA #SHUBMANGILL