VIDEO: ‘அசுரவேகத்தில்’ மோதி தலைக்குப்புற விழுந்த வீராங்கனை.. ‘விலகிய கால் மூட்டு எலும்பு’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகால்பந்து போட்டியின்போது கீழே விழுந்ததில் விலகிய மூட்டு எலும்பை தானே சரிசெய்த வீராங்கனையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்காட்டிஷ் மற்றும் இன்வெர்னஸ் கலிடோனியன் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான பெண்கள் கால்பந்து போட்டி ஸ்காட்லாந்தில் நடைபெற்றது. கலிடோனியன் அணியை விட ஸ்காட்டிஷ் அணி 6-0 என்ற கணக்கில் பின் தங்கி இருந்தது. இதனால் ஸ்காட்டிஷ் அணியினர் கோல் அடிக்கும் முனைப்புடன் தீவிரமாக விளையாடினர்.
அப்போது ஸ்காட்டிஷ் அணியின் கேப்டன் ஜேன் ஓ டூல் பந்தை அடிக்க முயன்றபோது எதிரணி வீராங்கனையின் மீது மோதி தலைகுப்புற கீழே விழுந்தார். இதில் அவரின் கால் மூட்டு எலும்பு விலகியது. ஆனால் சிறிதும் யோசிக்காமல் வலியை தாங்கிக்கொண்டு தானே கையால் சுத்தியலைக் கொண்டு அடிப்பதுபோல் அடித்து சரி செய்தார். அதன்பின்னர் மீண்டும் எழுந்து ஆட்டத்தில் கலந்து கொண்டார்.
How does a Scottish footballer deal with a dislocated kneecap? 🤔
St Mirren WFC captain Jane O'Toole bashes her kneecap back into place before playing on for the remainder of the game.
📽️ Courtesy of @ICTFC pic.twitter.com/GMUsv0ffG5
— BBC Sport Scotland (@BBCSportScot) February 21, 2020
இதைப் பார்த்த சக வீராங்கனைகள் ஆச்சரியத்தில் உறைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.