'FOOT BALL-லாம் தெரியாது'.. 'ஆனா எங்க ஆட்டம்'.. 'வெறித்தனமா இருக்கும்'.. வைரலாகும் யானைகள்.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > கதைகள்By Siva Sankar | Oct 25, 2019 05:45 PM
மைசூரின் துபரே யானைகள் முகாமில், தசரா கொண்டாட்டத்தை முன்னிட்டு யானைகள் கால்பந்து விளையாண்டுக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கால் பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள விஜய்-யின் பிகில் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், யானைகளும், ‘தள்ளுங்க.. நாங்களும் விளையாடுறோம்’ என்பதுபோல், கால் பந்து விளையாடும் செய்தி தென்னிந்தியா முழுவதும் பரவி வருகிறது.
மொத்தம் 29 யானைகள் தங்க வைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் அவற்றின் தினசரி செயல்பாடுகள், சேட்டைகள், வாழ்க்கை முறை, உணவுண்ணுதல், விளையாட்டு, பிற யானைகளுடனான நட்புறவு உள்ளிட்டவற்றை பார்ப்பதற்கென்றே இங்கு அதிக அளவில் பார்வையாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.
#WATCH Karnataka: Elephants who took part in the parade during #Dasara festival in Mysuru, were seen playing football yesterday, after they were shifted to Dubare Elephant Camp* in Kodagu district. pic.twitter.com/yHonc8q3Sz
— ANI (@ANI) October 22, 2019
அவ்வகையில் தசரா கொண்டாட்டம் தொடங்கியதில் இருந்தே இந்த யானைகளின் மீது பலரும் ஈர்ப்பு கொண்டு காண வருகின்றனர். இந்த நிலையில் கால் பந்து விளையாடும் யானைகளின் வீடியோ இணையத்தில் பரவி வருவதோடு, பலரும் விதவிதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.