என்னதான் 'ஆத்திரமா' இருந்தாலும்... 'அங்க' போயா கடிச்சு வைக்குறது ?... 5 ஆண்டுகள் தடை, '10 தையல்களுடன்' முடிவுக்கு வந்த விவகாரம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசண்டையின்போது சமாதானம் செய்ய வந்த வீரரின், அந்தரங்க உறுப்பை கடித்த வீரருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

கிழக்கு பிரான்ஸின் உள்ளூர் கால்பந்தாட்ட லீக் தொடரில் த்ரிவில்லே மற்றும் சொச்ட்ரீச் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது இரு அணியைச் சேர்ந்த வீரர்கள் இருவருக்குள் மோதல் தொடங்கி இருக்கிறது. முதலில் வாய்த்தகராறாக ஆரம்பித்த இந்த விவகாரம் தொடர்ந்து கைகலப்பில் போய் முடிய, இந்த சண்டையில் மூன்றாவது வீரர் ஒருவர் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது சொச்ட்ரீச் அணியை சேர்ந்த வீரர் சமாதானம் செய்ய வந்த வீரரின் அந்தரங்க உறுப்பை கடித்து விட்டார். இதில் அந்த வீரர் வலியால் துடிக்க சக வீரர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 10 தையல்கள் அந்தரங்க உறுப்பில் போடப்பட்டு இருக்கிறது. இதையடுத்து உள்ளூர் கால்பந்தாட்ட சங்கம் கடித்த வீரருக்கு 5 ஆண்டுகள் தடையும், கடிவாங்கிய வீரருக்கு 6 மாதங்கள் தடையும் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனினும் அந்த போட்டி வெற்றி-தோல்வி இன்றி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கால்பந்து போட்டிக்கு இவ்வளவு கலவரமா?
