இவங்களுக்கு இதே 'வேலையா' போச்சு... 250 கோடி 'நஷ்டம்' சார்... சும்மா விடாதீங்க... முதல்வருக்கு 'பறந்த' புகார்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 26, 2020 05:49 PM

கோழிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக பரவிய வதந்தியால், சுமார் 250 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Coronavirus Rumors: Chicken and Egg Price fall down in TN

நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கரின் தாயார் பழனியம்மாள் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் காலமானதை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நாமக்கல் வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது அவரிடம் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ், தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் மனு ஒன்றை அளித்து தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.

மேலும் கோழிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக பரவிய வதந்தியால் இதுவரை சுமார் 250 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வரிடம் அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். இந்த நஷ்டத்தினை சரிக்கட்ட 'சிக்கன் மேளா' ஒன்றை விரைவில் நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.