இந்தியாவயே பெருமை பட வச்சீட்டயே ‘தல’.. இத யாராவது நோட் பண்ணீங்கலா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 06, 2019 01:20 AM

தோனியின் விக்கெட் கீப்பிங் க்ளவ்ஸில் இருந்த குறீயீடு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Balidan symbol on wicket keeping gloves of Dhoni during IND v SA match

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நேற்று சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடிமால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 47.3 ஓவர்களின் முடிவில் 230 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 122 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் சதத்தை அடித்த வீரர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் க்ளவ்ஸில் இருக்கும் குறியீடு ஒன்றை பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். அதில் க்ளவ்ஸில் இந்திய ராணுவத்தின் பாரா கமேண்ட்டோ முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். தோனி இந்திய ராணுவத்தில் எல்.டி கார்னல் பதவியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #MSDHONI #TEAMINDIA #INDVSA #CWC19