‘சேட்ட புடுச்ச பைய சார் நம்ம கோலி’.. யாரை இப்டி கிண்டல் பண்றாரு?.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 17, 2019 08:49 AM

பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் போது விராட் கோலி செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Virat Kohli’s funny expression goes viral

இந்தியா மற்றும் பாகிஸ்தனுக்கு இடையேயான உலகக்கோப்பை தொடர் நேற்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இப்போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய தமிழக வீரரான விஜய் சங்கர் தான் வீசிய முதல் பந்திலேயே சாதனை படைத்து அசத்தினார். அதில் போட்டியின் 5 -வது ஓவரை வீசிய போது தீடீரென இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த ஓவரின் மீதி பந்துகளை வீச விஜய் சங்கர் அழைக்கப்பட்டார். அப்போது உலகக்கோப்பையில் விஜய் சங்கர் வீசிய முதல் பந்தில் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்கை அவுட் செய்து அசத்தினார். இதன்மூலம் உலகக்கோப்பையில் அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுதத்வர்களின் பட்டியலில் விஜய் சங்கர் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் போட்டியின் நடுவே மைதானத்துக்கு வெளியே குல்தீப் யாதவுடன் சேர்ந்து யாரையோ கிண்டல் செய்யும் விதமாக பேசிக்கொண்டிருந்தார். இது பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதை கிண்டல் செய்வதுபோல் உள்ளது என ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Tags : #ICCWORLDCUP2019 #VIRATKOHLI #INDVPAK #TEAMINDIA