‘என்னடா கொட்டாவி எல்லாம் விட்றீங்க’.. வச்சி செய்யும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 17, 2019 12:36 AM

பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது மைதானத்தில் கொட்டாவி விட்ட புகைப்படத்தை இணையத்தில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

Sarfraz Ahmed trolled for being lazy during IND vs PAK match

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்களின் முடிவில் 336 ரன்களை குவித்தது. இதில் ரோஹித் சர்மா சதம்(140), விராட் கோலி(77) மற்றும் கே.எல்.ராகுல்(57) ஆகிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய பௌலர்களை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே திணறியது. இதில் சிறப்பாக பந்து வீசிக்கொண்டிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இதனால் புவனேஷ்வர்குமார் பாதியில் விட்டு சென்ற ஓவரை விஜய் சங்கர் வீச வந்தார். இதில் விஜய் சங்கர், உலகக்கோப்பையில் தான் வீசிய முதல் பந்திலேயே பாகிஸ்தான் பேட்ஸ்மேனை அவுட் செய்து சாதனை படைத்தார்.

இதனை அடுத்து போட்டியின் நடுவே மழை குறிக்கிட்டதால், ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு 302 ரன்களை பாகிஸ்தானுக்கு இலக்காக வைக்கப்பட்டடது. இதனை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்களின் முடிவில் 212 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் கீப்பிங் செய்து கொண்டிருந்த போது கொட்டாவி விட்டார். இந்த ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு கிண்டல் செய்யும் விதமாக பல மீம்ஸ்களை உருவாக்கி சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Tags : #ICCWORLDCUP2019 #INDVPAK #SARFARAZ #MEMES