‘தல’ சதம் அடிச்சப்போ இத யாராவது நோட் பண்ணீங்களா?.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 29, 2019 10:46 AM

வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தோனி சதம் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Virat Kohli celebrates MS Dhoni\'s century

இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் நேற்று கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னர் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இதனால் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டுமென இந்தியா முனைப்பு காட்டியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்களை எடுத்தது. இதில் தொடக்க ஆட்டகாரர்களான தவன் மற்றும் ரோஹித் ஷர்மா சொதப்பினாலும், அடுத்து வந்த விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் கோலி 47 ரன்களில் அவுட்டாகினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சங்கர் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ராகுல்-தோனி கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்து ரன்களை குவிக்க தொடங்கியது. இதில் ராகுல் 108 ரன்களும், தோனி 113 ரன்களும் எடுத்தனர். இதில் தோனி 99 ரன்கள் எடுத்திருந்த போது சிக்ஸர் அடுத்து சதத்தைக் கடந்தார். இதனால் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் எழுந்து உற்சாகப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 49.3 ஓவர்களில் 264 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.