‘யாரும் செய்யாத புதிய சாதனை’.. வரலாறு படைத்த ஜடேஜா!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 11, 2019 11:03 PM
ஐபிஎல் தொடரில் புதிய சாதனையை சென்னை அணி வீரர் ஜடேஜா படைத்து அசத்தியுள்ளார்

ஐபிஎல் டி20 லீக்கின் 25 -வது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று(11.04.2019) நடைபெறுகிறது. இப்போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளை வென்று 10 புள்ளிகளுடன் சென்னை அணி முதல் இடத்தில் உள்ளது.
இந்லையில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய ராஜஸ்தான் அணியின் தொடக்கவீரர்களாக ரஹானே மற்றும் பட்லர் களமிறங்கினர். இதில் ரஹானே 14 ரன்களிலும், பட்லர் 23 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனை அடுத்து வந்த வீரர்களும் தொடர்ந்து அவுட்டாக 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 151 ரன்களை எடுத்தது. இதில் ஜடேஜா 2 விக்கெட்டுகளை எடுத்தன்மூலம் ஐபிஎல் தொடரில் இடது கை பௌலர்களில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.
And the Royal Navghan reaches a TON mark with the ball in the #VIVOIPL! #WhistlePodu #Yellove #RRvCSK 🦁💛 pic.twitter.com/q2SitkioYj
— Chennai Super Kings (@ChennaiIPL) April 11, 2019
