'சென்னை மக்கள் இருக்காங்களே'...அப்படி என்ன 'சென்னை மக்களை' பத்தி 'தல' சொன்னாரு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Apr 10, 2019 11:31 AM

தோனி இல்லை என்றால் சென்னை அணியே இல்லை என்பது தான் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் நிலைப்பாடு.அந்த அளவிற்கு சென்னை ரசிகர்களுக்கும் தோனிக்கும் அப்படி ஒரு பிணைப்பு.அதனை தோனி அவ்வப்போது வெளிப்படுத்துவது உண்டு.

i have a special bonding with chennai fans says Dhoni

தோனிக்கு கிரிக்கெட் பார்க்கும் மக்கள் மட்டுமல்ல,மற்ற நாட்டு வீரர்களும் தோனியின் ரசிகர்களாக இருப்பது தான் அதன் சிறப்பம்சம்.ஐபிஎல் போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் வருகிறார்களோ இல்லையோ,நிச்சயமாக தோனியை காண்பதற்கு தான் பல ரசிகர்கள் வருகிறார்கள் என கூறலாம்.அந்த அளவிற்கு எங்கு போட்டி நடந்தாலும் போட்டியினை காண்பதற்கு கூடும் கூட்டமே அதற்கு சாட்சி.

நான் இங்கு வந்திருப்பது தோனி என்கிற ஒருவருக்காகத் தான் என மும்பையில் பாட்டி ஒருவர் பதாகையுடன் நின்றதே அதற்கு சாட்சி.இது போன்ற உணர்வு பூர்வமான சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வது உண்டு.

இந்நிலையில் சென்னைக்கும் எனக்கும் உள்ள பந்தம் பிரிக்க முடியாத ஒன்று என்றும் சென்னை மக்கள் என்னை எப்போதே ஏற்று கொண்டு விட்டார்கள் என தோனி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.நேற்று கொல்கத்தா சென்னை போட்டிக்கு பின்பு பேசிய தோனி இதனை தெரிவித்துள்ளார்.