தோல்விக்கு முற்றுப்புள்ளி?.. ‘9 வருடத்துக்கு பின் மீண்டும் ஆர்சிபியில் இணைந்த பிரபல வீரர்’.. இணையத்தில் தெறிக்க விட்ட ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 12, 2019 10:08 PM

ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு தென் ஆப்பரிக்காவைச் சேர்ந்த பிரபல பந்துவீச்சாளர் இணைந்துள்ளார்.

IPL 2019: Dale Steyn joins RCB as a replacement for Coulter Nile

ஐபிஎல் டி20 தொடரின் 12 -வது சீசன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதற்கு அந்த அணியின் பீல்டிங் மற்றும் பந்துவீச்சு குறையாக சொல்லப்பட்டு வருகிறது. முன்னதாக சென்னை அணியின் உடனான முதல் போட்டியில் 70 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதனை அடுத்து கொல்கத்தா அணியுடான போட்டியில் 205 ரன்கள் என்ற இமாலய இலக்கை வைத்தும் கடைசியில் கொல்கத்தா வீரர் ரஸலின் அதிரடியால் ஆர்சிபி வெற்றி வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் பெங்களூரு அணி வீரர் கூல்டர் நைல் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக தென் ஆப்பரிக்க வீரர் டேல் ஸ்டெயின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #IPL2019 #IPL #ROYALCHALLENGERSBANGALORE #PLAYBOLD