'எங்களோட 'தர்பார்'தான் எப்பவும்'.. ட்விட்டரை தெறிக்கவிட்ட பாஜி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Apr 12, 2019 11:13 AM

'களத்துல மட்டும்தான் நாங்க மொறப்போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க, வெள்ளந்தியா சிரிப்போம்' என வழக்கம்போல் தமிழில் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் தெறிக்கவிட்டுள்ளார்.

harbhajan singh tamil tweet after win the rajasthan match

ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைப்பெற்ற போட்டியில் டாஸ் வென்ற தோனி பந்துவீச முடிவு செய்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது.  முதல் ஓவரிலே ரன் கணக்கைத் தொடங்காமல் வாட்சன் வெளியேற, சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. 2-வது ஓவரில் ரெய்னா ரன் அவுட் ஆக, தோனி - ராயுடு இருவரின் அட்டகாசமான ஆட்டத்தால்  சி.எஸ்.கே. அணி வெற்றியை நோக்கிப் பயணித்தது.

பரபரப்பான கடைசி ஓவரில் ஜடேஜா முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க, தோனி 3-வது பந்தில் அவுட் ஆனார். 5-வது பந்தில் நோபால் சர்ச்சை ஏற்பட, கடைசி பந்தில் சாண்ட்னர் சிக்ஸர் விளாச சென்னை அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்தது. புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்தை தக்கவைத்துக்குக் கொண்டது. இந்தப்போட்டியில் ஜடேஜா ஐ.பி.எல். போட்டியில் 100-வது விக்கெட்டை எடுத்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி தலைமையில் இது நூறாவது வெற்றியாகும். இந்நிலையில் வழக்கம்போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், ட்விட்டரை தெறிக்கவிட்டுள்ளனர். ‘போடா நம்மல படைத்த அந்த ஆண்டவனே நம்ம பக்கம்தான். எடுடா வண்டிய போடுடா விசில..’ என்று பஞ்ச் வசனங்களை இம்ரான் தாஹிர் தனது ட்விட்டரில் பறக்கவிட்டார்.

இதேபோல், ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி, வெற்றிபெற்றது குறித்து ஹர்பஜன் சிங் இப்படி ட்வீட் செய்துள்ளார். `நாங்க வந்தது வேணும்னா ஜெய்ப்பூரா இருக்கலாம், ஆனா அங்கேயும் ஐபிஎல் போட்டியில எங்களோட தர்பார்’ இது நம்ம சென்னைக்குப் புதிதாகக் கிடைத்த தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்கின் ட்வீட்.

 

Tags : #IPL2019 #MSDHONI #CSK #HARBHAJAN #YELLOVE #TWITTER