‘கட்டை விரலில் காயம்’.. அடுத்த போட்டியில ‘தல’ விளையாடுவாரா? வெளியான புதிய அப்டேட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 05, 2019 04:25 PM

உலகக்கோப்பைத் தொடரில் அடுத்து நடைபெற உள்ள இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Update on MS Dhoni’s thumb injury

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 6 -ல் வெற்றி பெற்று 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2 -வது இடத்தில் இருந்து வருகிறது. இதன்மூலம் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்துள்ளது. இதனை அடுத்து இலங்கை அணியுடான லீக் சுற்றை இந்திய அணி நாளை(06.07.2019) விளையாட உள்ளது.

இதில், விக்கெட் கீப்பர் தோனியின் கட்டை விரலில் காயம் அடைந்துள்ளதால் இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் போது தோனியின் கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் அப்போட்டியில் கடைசிவரை விளையாடி 42 ரன்களை தோனி எடுத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் தோனி விளையாடினார்.

இந்நிலையில் காயத்தின் வீரியம் குறித்து அணி நிர்வாகம் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. அதில், ‘300 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள தோனி, இனிவரும் போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்ற தெளிந்த மனநிலையுடன் உள்ளார். அவரது காயம் நன்கு குணமடைந்து உள்ளது. அவர் காயத்தையும், வலியையும் பொருட்படுத்தமாட்டார். அடுத்த போட்டியில் தோனி விளையாட அணி நிர்வாகம் சம்மதித்துள்ளது. ஆனால் தோனி என்ன முடிவு எடுப்பார் என்பது தெரியவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #MSDHONI #INJURYUPDATE #TEAMINDIA #INDVSL