'மேப்பை நம்பி போயி இப்டி ஆகிப்போச்சே'... 'கார் டிரைவர்களுக்கு நேர்ந்த கதி'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Jun 28, 2019 12:19 PM

அமெரிக்காவில் விரைவாக செல்வதற்காக, கூகுள் மேப்பை நம்பி ரூட்டை மாற்றிய ஓட்டுநர்கள் சகதியில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

Dozens Of Drivers Get Stuck In Mud After Google Maps Disaster

கொலரேடோவில் உள்ள டென்வர் சர்தேச விமான நிலையத்திற்கு வந்த தனது கணவரை, வரவேற்க கோன்னீ என்ற பெண் சென்றுகொண்டிருந்தார். அப்போது, டிராஃபிக்கில் இருந்து தப்பித்து, விரைவாக சென்றடைய கூகுள் மேப்பை ஆன் செய்தார். அதில், கூகுள் மேப் டீ-டூர் எனும் பெயரில் மாற்று வழி இருப்பதாகக் கூறி அறிவுறுத்தியது.

43 நிமிடங்களில் செல்ல வேண்டிய இடத்துக்கு 23 நிமிடங்களில் சென்று விடலாம் எனக் காட்டியதை அடுத்து, கோன்னீ தனது பாதையை மாற்றினார். சற்று நேரத்தில் பொது வழியற்ற தனியார் சாலையில், தன்னைப் போன்றே பாதையை மாற்றி வந்த 100-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களின் வாகனங்கள் சகதியில் மாட்டிக் கொண்டது தெரியவந்தது.

கூகுள் மேப்பை நம்பி தவறான முடிவெடுத்துவிட்டதாக ஓட்டுநர்கள் புலம்பித் தள்ளினர். சகதியில் சிக்கிய வாகனங்கள் மீள முடியாமலும், ஒரு கார் மட்டுமே பயணிக்கக் கூடிய அகலப் பாதையில் வாகனத்தைத் திருப்ப முடியாமலும் தவித்தனர்.

Tags : #COLORADO #MAP #DRIVERS