அடேய் !... 'அநியாயம் பண்றீங்க டா' .... 'இப்படியா வச்சு செய்யுறது'... வைரலாகும் தெறி வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jun 17, 2019 10:31 AM

கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடந்தது. காயமடைந்த ஷிகர் தவான் இல்லாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார். இதையடுத்து  ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பௌலிங்கை தேர்வு செய்தார்.

Indian fans Trashing Pakistan After India’s World Cup Victory

இதனை தொடர்ந்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும்,ராகுலும் பொறுமையாகவே தங்களது ஆட்டத்தை தொடங்கினார்கள்.இவர்களின் அருமையான தொடக்கத்தினால் இந்திய அணி 17.3 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது.அதிரடியாக விளையாடிய ரோஹித் 140 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 336 ரன்கள் குவித்தது.

கடினமான இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் வீரர்கள்,இந்திய வீரர்களின் பௌலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல்,சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்கள்.இதையடுத்து 40 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 212 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டி வருகிறார்கள்.அதே வேளையில் நேற்றைய போட்டிக்கு முன்பு,இந்திய அணியினை கிண்டல் செய்யும் விதமாக,விங் கமாண்டர் அபிநந்தனை சித்தரித்து வெளியிட்ட வீடியோ,நாடு முழுவதும் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இதையடுத்து இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் அணியின் தோல்வியை கிண்டல் செய்யும் விதமாக பல்வேறு ட்ரோல் வீடியோகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

அதில் கூடைப்பந்து போட்டியில் தனக்கு பிடித்த அணி தோற்று விட, ரசிகர் ஒருவர் கோபத்தில் டிவியை உடைக்கிறார்.அதனை பகிர்ந்த ரசிகர் ஒருவர் இதுதான் பாகிஸ்தான் ரசிகர்களின் தற்போதைய நிலை,என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.