‘தல’ தோனி எவ்வளவு நாள் சி.எஸ்.கே.வில் இருப்பார்?... அணி நிர்வாகம் விளக்கம்... குஷியில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஎவ்வளவு நாள் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இடம் பிடிப்பார் என அந்த அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பின்னர் சர்வதேசப் போட்டிகள் எதிலும் தோனி விளையாடவில்லை. ஏறக்குறைய 6 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத தோனி, இனி இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவது சிரமமே என்ற விமர்சனம் எழுந்தது. ஏனெனில் சமீபத்தில் வெளியான பி.சி.சி.ஐ. ஒப்பந்தப் பட்டியலில் வரும் செப்டம்பர் மாதம் வரை தோனி ஒப்பந்தமாகவில்லை.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன் தோனி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், ஜார்க்கண்ட் அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட தோனி, நல்ல உடல்தகுதியுடன் இருப்பதாகவும் சிறப்பாக பேட்டிங் செய்ததாகவும் ஜார்க்கண்ட் பயிற்சியாளர் கூறினார். இதற்கிடையில் ஐபிஎல் தொடரில் தோனியின் எதிர்காலம் குறித்து சி.எஸ்.கே. உரிமையாளர் ஸ்ரீனிவாசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில் `எப்போது தோனி ஓய்வு பெறுவார்... எவ்வளவு காலம் அவர் விளையாடுவார்.. என பல விஷயங்களைத் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
நிச்சயம் அவர் விளையாடுவார். அந்த உறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன். இந்த ஆண்டு நிச்சயம் ஐபிஎல் தொடரில் அவர் கலந்துகொள்வார். அடுத்த (2021) ஆண்டு வீரர்கள் ஏலத்தில் அவரை நாங்கள் தக்கவைத்துக் கொள்வோம். இதில், யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்' என்றார். மேலும், இந்திய அணிக்காக அவர் விளையாடினாலும் இல்லாவிட்டாலும் நிச்சயம் சி.எஸ்.கேவில் இடம்பிடிப்பார் என்றும் ஸ்ரீனிவாசன் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
