2 வருஷப்பகை.. 'மனசுக்குள்ளேயே' வச்சு இருந்தேன்.. 'நோட்புக்' விவகாரம் குறித்து.. 'கோலி' விளக்கம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 07, 2019 01:04 AM

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கெஸ்ரிக் வில்லியம்ஸின் ஓவரில் சிக்ஸர் பறக்கவிட்ட கோலி, காற்றில் நோட்புக்கில் எழுதுவது போல சைகை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

Kohli Takes Out ‘Notebook’ To Give Kesrick Williams

இந்தநிலையில் நோட்புக் குறித்து கோலி கூறுகையில், '' 2 வருடங்களுக்கு முன் 2017-ம் ஆண்டு ஜமைக்காவில் போட்டி நடைபெற்றது. அப்போது கெஸ்ரிக் வில்லியம்ஸ் எனது விக்கெட்டை எடுத்து விட்டு, நோட்புக்கில் குறித்து வைத்துக்கொள்ளும்படி சைகை காட்டினார்.  அந்த நோட்புக்கை தான் நான் இன்று அவரிடம் கொடுத்தேன். மற்றபடி நான் மற்ற அணிகளுக்கு மரியாதை தருபவன் தான்,'' என தெரிவித்து இருக்கிறார்.