"யார் அந்த தேவதை".. மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி.. அந்த கேப்ஷன் தான்😍..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Jan 11, 2023 06:06 PM

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது மகளுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

Virat Kohli shares pic of his Daughter with lovely caption

Also Read | ஜோஷிமத் மாதிரியே பூமிக்குள் புதையும் அடுத்த நகரம்.. பீதியில் பொதுமக்கள்.. உச்சகட்ட பரபரப்பில் அதிகாரிகள்..!

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படுபவர் விராட் கோலி. கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் எட்டிய உயரம் அசாத்தியமானது. ஒருநாள் போட்டிகளில் 45 சதம், டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களை கோலி விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் கோலி இதுவரையில் 5 சதங்களை எடுத்திருக்கிறார். விளையாட்டில் இவரின் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. 2017 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறை பிரிவில் கோலிக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது.

Virat Kohli shares pic of his Daughter with lovely caption

விராட் கோலி கடந்த 2017 ஆம் ஆண்டு தனது காதலி அனுஷ்கா ஷர்மாவை கரம்பிடித்தார். இத்தாலியில் இவர்களது திருமண நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வாமிகா என இத்தம்பதி பெயர்சூட்டினர்.

இந்நிலையில் இன்று வாமிகாவின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் கோலியும், அவரது மகள் வாமிகாவும் உள்ளனர். அந்த பதிவில்,"My heartbeat is 2" என கோலி குறிப்பிட்டுள்ளார்.

Virat Kohli shares pic of his Daughter with lovely caption

அதேபோல, அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில்,"2 ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய மனம் அகல திறந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனி, மயங்க் அகர்வாலின் மனைவி ஆஷிதா சூட் மற்றும் யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Also Read | மரணமடைந்த செல்ல நாய்.. 50 அடிச்ச அப்புறம் ரோஹித் செஞ்ச உருக வைக்கும் செயல்.. கலங்கும் நெட்டிசன்கள்..!

Tags : #VIRAT KOHLI #VIRAT KOHLI SHARES PIC OF HIS DAUGHTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Virat Kohli shares pic of his Daughter with lovely caption | Sports News.