"வீடியோ கேம் மாதிரி இருக்கே".. சூர்யாகுமார் பேட்டிங் பாத்துட்டு கோலி கொடுத்த ரியாக்ஷன்.. பதிலுக்கு SKY சொன்ன வைரல் பதில்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பை தொடரில் அரை இறுதி போட்டி வரை முன்னேறி இருந்த இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்வியின் காரணமாக அத்துடன் வெளியேறி இருந்தது.
Also Read | "என் முதல் குழந்தை என் கையிலயே..."..எலான் மஸ்க்கின் சோக பக்கம்.. உருக்குலைய வைத்த ட்வீட்..
உலக கோப்பை தொடரை தொடர்ந்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, அங்கே கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது.
ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், டி 20 அணியை ஹர்திக் பாண்டியாவும், ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியை ஷிகர் தவானும் தலைமை தாங்குகின்றனர்.
மேலும், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரும் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்திருந்தது.
அதில், சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 11 ஃபோர்கள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 111 ரன்கள் எடுத்திருந்தார். டி 20 போட்டியில் அவரது இரண்டாவது சதமாகவும் இது பதிவானது. மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விரட்டிய சூர்யகுமார் யாதவ் மேஜிக்கை தான் பேட்டிங் என்ற பெயரில் செய்து வருகிறார். பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கூட சூர்யகுமார் யாதவ் பேட்டிங் குறித்து வியப்பில் ஏராளமான கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில், சூர்யகுமார் யாதவ் பேட்டிங் பார்த்து விராட் கோலி சொன்ன கருத்தும் அதற்கு சூர்யகுமார் கொடுத்த பதிலும் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
சூர்யகுமார் பேட்டிங்கை பார்த்த கோலி, "தான் ஏன் உலகில் சிறந்த வீரர் என்பதை சூர்யகுமார் காட்டிக் கொண்டிருக்கிறார். நான் போட்டியை நேரலையில் பார்க்கவில்லை. ஆனால், இது அவரின் இன்னொரு வீடியோ கேம் இன்னிங்ஸ் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் 😂" என குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ கேம் இன்னிங்ஸ் ஆடுவதாக சூர்யகுமாரின் அதிரடியை கோலி குறிப்பிட, இதற்கு சூர்யகுமார் பதில் கொடுத்துள்ளார். "Bhauu🤗🧿" (சகோதரர்) என கோலியின் ட்வீட்டை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.