சந்தேகமா?.. விராட் கோலி மேலயா?.. ICC பகிர்ந்த தெறி வீடியோ.. குளிர்ந்து போன கோலி ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி உலகக்கோப்பை T20 போட்டிகளில் பேட்டிங் செய்த வீடியோவை ICC பகிர்ந்துள்ளது.
Also Read | 2024 அமெரிக்க அதிபர் தேர்தல்.. போட்டியிடுவதாக அறிவித்த டொனால்ட் ட்ரம்ப்..!
இந்திய அணியின் ரன் மிஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலிக்கும் ஒரு சரிவு இருக்கத்தான் செய்தது. 2019 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கு பிறகு பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறினார் கோலி. அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில்தான் உலகக்கோப்பை T20 தொடர் ஆஸ்திரேலியாவில் துவங்கியது.
விராட் கோலி மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்தன. அத்தனைக்கும் தான் தகுதியானவர் என முதல் போட்டியிலேயே நிரூபித்தார் கோலி. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கிட்டத்தட்ட இந்தியா தோற்றுவிட்டது என்ற நிலையில், பாண்டியாவுடன் இணைந்து கோலி காட்டிய வானவேடிக்கைகள் கிரிக்கெட் வரலாற்றில் ஏனென்றும் நிலைத்திருக்க போகிறது. உலகின் மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு தனது பேட்டால் பதில் சொன்னார் கோலி. அந்தப் போட்டியில் 53 பந்துகளை சந்தித்த கோலி 82 ரன்களை விளாசி இந்தியாவுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
அவருடைய அதிரடி அடுத்தடுத்த ஆட்டங்களிலும் தொடர்ந்தது. T20 போட்டிகளில் முதன்முறையாக 4000 ரன்கள் எடுத்த வீரர் என்னும் பெருமையையும் இந்த உலகக்கோப்பை தொடரில் பெற்றார் கோலி. அண்மையில் முடிந்த இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் கோலி .
6 போட்டிகளில் 296 ரன்களை எடுத்திருந்த கோலி, இதன் மூலம் தன்மீது வைக்கப்பட்டிருந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியமான ICC தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறது. அதில், T20 உலகக்கோப்பை 2022-ல் விராட் கோலியின் அட்டகாசமான ஷாட்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், அந்த பதிவில்,"விராட் கோலி மீது எப்போதும் சந்தேகிக்க வேண்டாம். மேஸ்ட்ரோ T20 2022 லும் தனது சிறப்பான ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக்காட்டியுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வீடியோ விராட் கோலி ரசிகர்களிடையே படுவைரலாக பரவி வருகிறது.